ஆசைகள்
நம் மகிழ்ச்சியை
மெல்ல மெல்லக் கொல்லும்

புதிய பாதையில்
பயணிக்க ஆசை
என் கனவுகளுடன்
மட்டும்

பொறுமையும்
முயற்சியும்
ஒரு நாள் பயன் தரும்
நிலத்தை உருவாக்கும்

நீயே உன்னை நம்பினால்
உலகம் உன்னை நம்பும்

முடியும் என்ற
நம்பிக்கை தான்
வெற்றியின் முதல் படி

வ(ழி)லியில்
வாழ்க்கையை தேடாதீர்கள்
வாழ்க்கையிலும்
வ(லி)ழிகள் உண்டென
கடந்துவிடுங்கள்

பொறாமை என்பது
அவனது வெற்றிக்கு
நீ தரும் பாராட்டு
உனக்கே தெரியாமல்

வெற்றி அடைய முடியாது
என்று நினைக்கும் போது
உங்களை சந்திக்கும் ஒரு மந்திரம்
இன்னும் முயற்சி செய்

பொறாமையை வெல்லும்
ஒரே வழி அன்பும் நம்பிக்கையும்

நம்பிக்கை உடையவன்
இருளிலும் ஒளி காண்பான்