ஒரு நாள் இழப்பது
ஒரு பக்க வரலாற்றை
எரிப்பது போல

நான் எடுக்கும் முடிவு
சரியானதா என்று
எனக்குத் தெரியாது
ஆனால் எடுத்த முடிவை
நான் சரியாக்குவேன்

கிழிந்த புத்தகத்தில் கூட
நீ உயர்ந்து வாழ ஒரு
சில வரிகள் இருக்கும்
ஒரு முறையேனும்
படித்துப் பார்

நழுவும் நிமிடங்கள் மட்டுமே
இழந்த பாசத்தை
நினைவுபடுத்தும்

மனதுக்குள் அழும் நொடி
வெளியே சிரிக்கும்
முகத்தில் மறைந்திருக்கும்

தொலைத்தவனுக்கே
தேடுதலின் அருமை
இழந்தவனுக்கே
பிரிவின் அருமை
ஒவ்வொரு நிகழ்வாய்
வாழ்க்கை

மழை வரும் நேரத்தில்
காற்றின் நறுமணம்
பூமியின்
இனிமையைக் காட்டும்
முதல் அடையாளம்

உனது நேற்றைய
தோல்விக்கான
காரணங்களை கண்டறிந்தால்
மட்டுமே
வெற்றியை நோக்கி பயணம்
செல்கையில் வரும் தடைகளை
உடைத்தெறிய முடியும்

தன் விருப்பத்தை
தியாகம் செய்து
நம் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உறவை மட்டும்
என்றும் இழந்து விட கூடாது

இந்த உலகம்
உன் முயற்சியை
கவனிக்காது
முடிவுகளைத் தான்
கவனிக்கும்
சிந்தித்து செயல்படு