வாழ்க்கையில் நமக்கு
கிடைக்கும்
சிறந்த பரிசு
பிறர் நம்மீது வைக்கும்
நம்பிக்கை தான்

எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு

காற்றை எதிர்த்துப் பறக்கும்
பறவை போல
சிரமங்களை முன்னேற்றமாக மாற்று

நமக்கு குழி பறிக்க
யாரும் தேவையில்லை
நாம் விட்டுச் செல்லும்
கவனபிழைகள் போதும்

என் வெற்றியை
நேசிக்காதவர்கள்
பார்வைக்கு முன்
காயங்களையும்
சோதனைகளையும்
தாண்டி மீண்டு நிற்பதே
என் வெற்றியின் முதல் படி
தோல்விகளையும் தாண்டி
என்னை வெறுத்தவர்களின்
கண்களுக்கு முன்னால்
மீண்டு சாதனை படைத்தவனாக
எண்ணப்படுவேன்

சில வரிகள் வெறும்
வார்த்தைகளல்ல
வெளிப்படுத்தயியால
உணர்வுகள்

நிறைய பேர் செல்வதால்
அது நல்வழி
என்று பொருளல்ல

சிறிய தருணங்களை
மதிக்க கற்றுக்கொண்டால் தான்
பெரிய நினைவுகள் உருவாகும்

காலம் யாருக்காகவும்
காத்திருப்பது இல்லை
ஆனால்
உன்னை நேசிக்கும்
உண்மையான இதயம்
நிச்சயம் உனக்காக
காத்திருக்கும் என்றும்

எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும்
என்று முயற்சிக்கும்
உன் தன்னம்பிக்கையின்
முன்னால்