நாம் தேடும் ஒருவர்
நம்மை தேடும் உறவனால்
வாழ்க்கை பேரழகாகும்

அன்பு என்பது பொது
நீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்
கிடைக்கவில்லை என்பதால்
அன்பிற்கு ஏன்
இந்த அனாதை பட்டம்

நம் வருத்தங்கள் உலகிற்கு
தெரியாமல் போவதை விட
நம் உலகமாயிருப்பவர்களுக்கும்
தெரியாமல் போவது
தான் பெருந்துயரம்

தடைகள் நம் திறமைக்கு
போட்டி அல்ல
பரிசோதனை மட்டுமே

உன்னை விட்டு விலக
நினைப்பவர்களுக்கு
பாரமாய் இருப்பதை விட
அவர்களை பாராமல் இருந்து பார்
உன் மதிப்பு அவர்களுக்கு தெரியும்

தொடங்குவதை விட
தொடர்வதே
வெற்றியின் முதல் வெற்றி

இன்றைய
அசமந்தபோக்கால்
நாளைய வெற்றிகள் கூட
தடைப்படலாம்

விடை தெரிந்த
கேள்விகளுடன்
துணிவதல்ல வாழ்க்கை
விடை தெரியாத
கேள்விகளுக்கும்
விடை சொல்ல
துணிவதே வாழ்க்கை

விடியலை தேடி
இரவுகளும் காலத்தை
கடத்துகிறது தினமும்

முயற்சியை நிறுத்தாத மனம்
அதே வெற்றியின் சாவி