ஒருவரின் சின்ன சின்ன
மாற்றங்கள் மனக்கசப்பை
தந்தாலும் அவர்களை
புரிந்து கொள்ள
ஒரு வாய்பினை தந்துவிடுகிறது

ஒரு இதயம் உடையும் சத்தம்
அமைதியில் மட்டுமே கேட்கும்

ஆவலாய் காத்திருக்கிறோம்
மழைக்காக குடையும்
உனக்காக நானும்

ஏமாற்றங்கள் குறைய
எதிர்பார்ப்புகளை குறைத்து
கொண்டாலே போதும்

உடைந்த கண்ணாடி போல்
ஒட்டவைக்க முடிந்தும்
முடியாமல் போகிறது சில உறவுகளை

விரைவில் விழக்கூடிய
தருணமே உயரத்தில்
ஏறக்கூடிய நேரம் ஆகும்

காலம் எந்தத்
காயத்தையும்
ஆற்றுவது இல்லை
அது நம் மனதை
பக்குவபடுத்துகிறது
அவ்வளவு தான்

அன்பைக் காட்டுவதற்கு
மட்டுமல்ல
கோபத்தைக் கொட்டுவதற்கும்
பிரியமானவர்கள்
தேவைப்படுகிறார்கள்

உண்மையான
உணர்வுகளோடு
ஒருவரை நேசித்தால்
தவறான எண்ணங்கள்
வாய் வார்த்தையாக கூட
வெளிவராது

கிடைக்கும் வாய்ப்புகளைப்
பயன்படுத்தி வெற்றிக்
கனியை எட்டுபவனே
சாமர்த்தியசாலி ஆகிறான்