முடிவுகளை அறிவதற்கும்
முயற்சிகளை தொடங்குவதற்கும்
இடையில் இருக்கும்
இடம் தான்
நம்முடைய எதிர்காலம்
முடிவுகளை அறிவதற்கும்
முயற்சிகளை தொடங்குவதற்கும்
இடையில் இருக்கும்
இடம் தான்
நம்முடைய எதிர்காலம்
தனக்கு தானே குழி பறித்து
கொள்கிறான் மனிதன்
இயற்கையை அழித்து
கடந்தவை
கசப்பான நிகழ்வுகளென்றால்
அதை மீண்டும்
ருசிக்க நினைக்காதே
தோல்வி என்பது
முடிவு அல்ல
அது தைரியத்தின் முதல் பாதை
மௌனத்தில் மறைந்திருக்கும்
வலிகள் கூட
காலத்தின் கருணையால் ஆறிவிடும்
முயற்சி என்ற வேரில்லாமல்
வளர்ச்சி என்ற மரம்
வேறெங்கும் வேரூன்றாது
முகத்தை மூடினாலும்
மனதைத் திறந்து வை
நல்லெண்ணெம் நுழைவதற்கு
உன்னை உயிராக
மதிக்கும் உயிரை
நீ மதிக்காமல் இருந்தால்
நீ உயிராக மதிக்கும்
எந்த உயிரும்
உன்னிடம் இருக்காது
உனக்கான வாழ்க்கையை
நீ எழுது
வாழ்க்கை உனக்கானதாய் மாறும்
பிரச்சனைகள் முடிவல்ல
புதிய தொடக்கங்களுக்கான
சோதனைகள்