சூழ்நிலை கஷ்டமானால்தான்
மனிதர்கள் வலிமையாகிறார்கள்
சூழ்நிலை கஷ்டமானால்தான்
மனிதர்கள் வலிமையாகிறார்கள்
நாம மகிழ்ச்சியா இருந்தா
வாழ்க்கை நல்லா இருக்கும்
அதுவே
நம்மால் பிறரை மகிழ்ச்சியா
வைக்க முடிஞ்சா வாழ்க்கை
அர்த்தம் உள்ளதாவும் இருக்கும்
மகிழ்வித்து மகிழ்வோம்
வாழ்க்கை ஒரு பாடல் போல
ஒவ்வொரு நேரமும் இசை மாறும்
இதுதான் சரி என்று
உங்கள் மனதிற்குள்
ஒரு குரல் ஒலிக்கும்
சற்றும் தயங்காமல்
நடைமுறை படுத்துங்கள்
நேரம் கற்றுக் கொடுக்கும் பாடம்
நூறு புத்தகங்களை விட
வலிமையானது
சில காயங்கள் மறையும்
சில காயங்கள்
வாழ்க்கையை கற்றுக்கொடுக்கின்றன
வெற்றி என்பது
எவ்வளவு உயரம்
ஏறினாய் என்பதல்ல
கீழே விழுந்த பிறகு
எவ்வளவு தூரம் முன்னேறினாய்
என்பதே முக்கியம்
நீ ஒதுக்கப்படும் இடங்களில்
நிமிர்ந்து நில்
நீ புகழப்படும் இடங்களில்
அடக்கமாய் நில்
நீ விமர்சிக்கப்படும் இடங்களில்
மௌனமாய் இரு
நீ நேசிக்கப்படும் இடங்களில்
அன்புடன் இரு
உன்னைச் சுற்றி
நடப்பவற்றை அமைதியாக
கவனிக்க தொடங்கினாலே
நீ எடுக்கும் முடிவுகள்
தெளிவாக இருக்கும்
ஒரு தவறை திருத்தும்
மனம் இருந்தால்
அது வெற்றிக்கு முதல் படி