தட்டி விட்டவர்களையும்
தட்டிக் கொடுத்தவர்களையும்
வாழ்க்கையில் மறவாதே

வெற்றி தோல்வி அறியாமலேயே முடிந்துவிடும் விளையாட்டு வாழ்க்கை

மாற்றி யோசனை
செய்யாமல் மாற்றங்கள்
வருவதில்லை

உண்மை
ஒரு சில நேரத்தில்
மன வருத்தம் தான்
பேசும் பொய்
எப்போது உடையும்
என நினைக்க நினைக்க
மன அழுத்தம் தான்
அதற்கு உண்மையாகவே
இருந்துவிடலாம்

வெளியே இருக்கும் அமைதி
உள்ளே இருக்கும் போராட்டத்தின்
வெற்றிக்கான பரிசு

நமக்கு வேண்டியது எதுவும்
நம்மள விட்டு போகாது
நம்மள விட்டு போய்ருச்சுனா
அது நமக்கானது இல்ல

அளவோடு
இருந்திருக்கலாமோ என்பது
அடிபட்டு மிதிப்பட்டு
அவமானப்பட்ட பின் தான்
புரிகின்றது

துணிச்சல் என்பது
ஒருவரை பேச விடாமல்
செய்வது அல்ல
அனைவரையும்
நம்மை பற்றி
பேச செய்வது

விழுந்தாலும் எழுவோன்
வெற்றியைக் கையில் பிடிப்பான்

பிடித்த ஒருவரின்
உரையாடல் நம்மின்
கவலைகளை
மறக்க வைக்கும்