காலம் மாறும் என
கற்பனையில் காத்திருக்காதே
நீ முயற்சி செய்யாமல்
இங்கு எதுவும் மாறாது
சிலருக்கு வேண்டும் போது
வேம்பும் இனிக்கும்
வேலை முடிந்து விட்டால்
வெல்லமும் கசக்கும்
தொலைந்த நேரத்தை
திருப்பிக் கொண்டு வர முடியாது
ஆனால் புதிய முயற்சிகளை தொடங்கலாம்
வாழ்வின் சுவை
சவால்களில் தான் உள்ளது
பல நேரம் பயணமே
இலக்கை விட அழகானது
அதை புரிந்தவர்கள் தான் வாழ்கிறார்கள்
தனக்கு
திறமை இருக்கிறது
என்பதை ஆணவத்தால்
வெளிப்படுத்துவதை விட
ஆசானாய் இருந்து
வெளிப்படுத்த முயல்வதே
ஆகச் சிறந்தது
தீராத நினைவுகள் தான்
இரவு முழுக்க
விழித்திருக்கும் காரணம்
கடந்ததை நினைத்து
கவலைப்படாதே
அது உன்னை
கற்றுக் கொடுத்த ஆசிரியன்
இலக்கை அடையும் வரை
வெற்றியோ தோல்வியோ
எதையும் எதிர்பார்க்காமல்
ஓடிக் கொண்டே இரு
எதற்கும் தயாராக
இருக்க வேண்டும்
ஒருநாள் நமக்கான
வாய்ப்பு வரும்
📖 பக்கம் 37 / 606
📋 Copied