நிமிடங்களில் மாறும்
நிலைதான் வாழ்க்கையை
வித்தியாசமாக்குகிறது

சில பயணங்கள்
தனிமையில் தொடரவேண்டும்
வாழ்க்கையின் அர்த்தம் புரிய

பிழைகள் இல்லாமல்
வாழ்ந்தவன் யாரும் இல்லை
பிழைகளில் கற்றவன் தான் பெரியவன்

அடிக்கடி வரும் நிம்மதி
சோகத்தை மறைக்க உதவுகிறது

சிறு தூரம் மட்டுமே உள்ளது
ஓயாதே வெற்றி
உன் வழி வருகின்றது

வாழ்க்கையில்
வந்துட்டு போற
ஓவ்வொரு உறவும்
மறக்க முடியாத
ஏதோ ஒரு நினைவுகளை
பொக்கிஷமாக
தந்து விட்டு தான்
செல்கிறார்கள்

நீ வெற்றிபெற வேண்டுமெனில்
செவிடனாய் இரு

பழகிடும் உறவுகள்
விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தாங்காது

அவசரபட்டு
இழந்ததை எல்லாம்
அசிங்கப்பட்டு தான்
பெற வேண்டி உள்ளது
இவ்வாழ்வில்

விதை கூட இங்கு
விழுந்துதான் எழுகிறது
தோல்விகள் கூட ஒரு
நாள் தோற்றுப் போகும்
நம்பிக்கை இருந்தால்