தொலைவுகளால்
தொலைந்தவர்களை
இணைத்து விட்டு
அருகில் இருப்போரை
தொலைதூரமாக்குவது தான்
இணையத்தின் இயல்போ
தொலைவுகளால்
தொலைந்தவர்களை
இணைத்து விட்டு
அருகில் இருப்போரை
தொலைதூரமாக்குவது தான்
இணையத்தின் இயல்போ
சில பார்வைகள் சிரிக்கும்
ஆனால் மனதில் மட்டுமே
சோகம் கையெழுத்து போடுகிறது
சுயத்தை
அடகு வைத்து
கிடைக்கும் எதுவாயினும்
தேவையே இல்லை
பொய்யை அப்படியே
ஏற்றுக் கொள்கின்ற உலகம்
உண்மையை மட்டும்
எப்போதுமே எளிதில்
ஏற்றுக் கொண்டதில்லை
சில உறவுகள்
நிலைத்திருக்க
வேண்டுமென்றால்
புரிதலுடன் பொறுமையும்
அவசியமானது
பிரளயமே வந்தாலும்
உனை பிரியேன் அன்பே
உழைப்பின் சத்தம்
இல்லையென்றால்
வெற்றியின் ஒலி இருக்காது
நட்பில் உண்மை இருந்தால்
வாழ்வில் வெற்றி நிச்சயம்
வெற்றி ஒவ்வொரு தோல்வியிலும்
மறைந்திருக்கும் ஒரு புத்திசாலி
நிலவுக்கு பணியாது
காத்திருந்த பனித்துளி
மடிந்து விட்டது காலை
சூரியனை பார்த்ததும்