நீ நேர்மையாக வாழ்ந்தால்
வெற்றி உனக்கு
தானாக வந்துவிடும்

காலம் ஒவ்வொரு
துன்பத்திற்குப் பின்பும்
கண்டிப்பாக ஏதோ ஒரு
மகிழ்ச்சியினை
ஒளித்து வைத்திருக்கும்

எல்லாரிடமும்
அன்பா இருக்கலாம்
ஆனால் யாரோட அன்புக்கும்
அடிமையாக இருக்கக் கூடாது

குறிக்கோளை முடிவு
செய்த பின் அதற்கான
முயற்சிகளை மட்டும்
கவனம் செலுத்துங்கள்

அவரவர் இடத்தில்
அவரவர் நிலையில்
அவரவர் பார்வையில்
அவரவர் கருத்து
அவரவருக்கு சரியே

பெரும்பாலும் முதல்
சிந்தனை தெளிவற்றதாக
இருக்கும் எதற்கும் மறு
சிந்தனை செய்யுங்கள்

சோகத்தின் ஆழம்
சிரிப்பில் மறைக்கப்படும்

வெற்றி பெறும் முன்பு
போராட வேண்டும்
போராட்டமின்றி கிடைக்கும்
ஒன்று நிலைத்திருக்காது

வாழ்க்கை என்பது
வழி தேடுவதல்ல
வழி உருவாக்குவது

பெரும் துயரத்தையும்
கடத்தி விடும் சிறு பாலம்
நம்மீது அன்பு
கொண்டவர்களின் புன்னகை