துன்பம் நம்மை சூழ்ந்த
போதும் மேகம் கலைந்த
வானமாய் தெளிவாகவே
இருப்போம்

உணர்வுகளை
வார்த்தைகளில்
விவரிப்பது அத்தனை
எளிதல்ல

சில நேரங்களில்
சும்மா இருப்பதற்கு பின்னால்
பல வரிகள்
எழுத முடியாத
வலிகள் இருக்கின்றன

விழிகள் ஈரமானால்
இதயம் கனமாகிறது
கண்ணீர் ஒரு நதி
அது துக்கத்தின் வலியை
சுமந்து செல்கிறது💧😔

நிஜங்கள் எழுதும் கதையில்
நினைவுகள் மட்டுமே இங்கு
கதாபாத்திரங்கள்

கடந்து வந்த ஆயிரம்
ஏமாற்றங்கள் நீங்கள்
செய்யும் ஒரு புதிய
முயற்சிக்கு ஈடாகாது
முன்னேறுங்கள்
வெற்றி பெறுங்கள்

சின்ன முயற்சிகளால்
பெரிய வெற்றி பிறக்கிறது

சில பார்வைகள் புன்னகைக்கின்றன
ஆனால் அந்த பின்னணியில்
அழுகை ஒலிக்கிறது

ஒருவருடைய கண்களில் இருந்து
கண்ணீர் வரும் போது
இன்னொருவருடைய கண்களில்
இருந்தும் கண்ணீர் வந்தால்
அந்த உறவை விட இந்த
உலகத்தில் பெரிய உறவு
ஏதும் இல்லை

விபரம் தெரிந்த பிறகு
தான் தெரிகிறது விபரம்
தெரியாத வயதில் வாழ்ந்த
அந்த வாழ்க்கை தான்
சொர்க்கம் என்று