சிரமம் சுருங்கும் போது
மனவலிமை விரியும்

நம் மனதை மாற்றினால்
வாழ்க்கையோடே விதி மாறும்

மற்றவர் பெற்றதை பார்த்து
மனம் கலங்குவது
நம் உள்ளத்திலுள்ள
ஆசைகள் இன்னும்
நிறைவேறாததைக் காட்டும்

நாம் பிறருக்கு
செய்வதையே
நாமும் அடைவோம்
அன்பை கொடுத்தால்
அன்பு
வம்பை கொடுத்தால்
வம்பு

அடைய வேண்டிய இலக்கு
ஆயிரம் என்றால்
பாதை கடினமானாலும்
பயணிக்கத்தான் வேண்டும்

நினைவுகளை மாற்றினால்
நிலைமையும் மாறும்

முகமூடி கிழியும் வரை
அனைவரும் நல்லவர்களே

ஒவ்வொரு தவறும்
ஒரு திருத்தம் அல்ல
அது ஒரு புதிய வழிகாட்டி

இதயத்தின்
துடிப்பை வைத்தே
குழந்தைகள்
கண்டுபிடித்து விடும்
தான் இருப்பது
அன்னையிடமா
அடுத்தவரிடமா
என்பதை

ஒருவருடைய உண்மையான
அன்பை உதாசீனம்
செய்தால் ஒருநாள்
அவர்களுடைய அன்பிற்கே
ஏங்கும் நிலை வரும்