சிரிக்காத நாட்களும்
வாழ்க்கையின் பகுதிதான்
அவற்றால் தான்
சிரிப்பின் அருமை புரியும்

கஷ்டம் தாங்கிய காலமே
வெற்றியின் விதை நாட்டும் நிலம்

முயற்சியை நிறுத்தினால் தான் தோல்வி
முயற்சி தொடர்ந்தால்
அது வெற்றிக்கான சாலை

சில நேரம் நின்று விடுவது
தோல்வி அல்ல திசை மாற்றம்

ஏழை பணத்தை
நேசிப்பதில்லை
பணக்காரன் குணத்தை
நேசிப்பதில்லை

சிலரின் அன்பு போலவே
சில கனவுகளும் நிஜமாகாது

நமக்குள் நசுக்கும்
வார்த்தைகள் தான்
அதிகம் காயப்படுத்தும்

தேடிக் கொண்டே வாழாதே
வாழ்ந்து கொண்டே தேடு
இதில் தான் வாழ்க்கை
பயணமாகிறது

நாம் எத்தனை தானங்கள்
செய்தாலும் பிறரிடம்
காட்ட வேண்டிய பெரிய
தானம் நிதானம் தான்

கேளுங்கள்
கொடுக்கப்படும்
என்று சொல்லும் உலகில்
கேட்காமலே
அன்பை அள்ளித் தரும்
உறவுகள் அமைய
பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள்