மனதளவில் எவராலும்
உங்களுக்கு
வலி ஏற்படுத்த முடியாது
நீங்கள்தான்
உங்களைச் சுற்றி நிகழும
ஏதோவொன்றிற்கு எதிர்செயலாக
வலியை உருவாக்குகிறீர்கள்

உன் வயதைக் காட்டிலும்
உன் குணம் தான்
மற்றவர்களுக்கு எடுத்துக்
காட்டாக விளங்கும்

அமைதியாக வளரும் மரம்
தான் நிழலை பெரிதாக தரும்

எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)

கனவு தூக்கத்தை
கலைக்கலாம் ஆனால்
உன் கனவே தூக்கத்தால்
கலைய கூடாது

படிக்க முடியாத
புத்தகம் போல்
சில மனங்கள்
சோகத்தில் மூடப்படுகின்றன

நீ உயர விரும்பினால்
பிறரை இழிவுபடுத்த
வேண்டியதில்லை

கேக்க முடியாத
கேள்விகளும்
சொல்ல முடியாத
பதில்களும்
என்றுமே சுவாரசியமினவை

நேரம் இழக்கலாம்
நம்பிக்கையோ
இல்லை என்றால்
வாழ்க்கை நகராது

எதிர்ப்புகளை எதிர்கொள்வதே
வாழ்க்கையின் வெற்றியை
தீர்மானிக்கும்