கிடைக்க கிடைக்க
திகட்டாத ஒன்று
நாம் நேசிக்கும்
ஒருவரின் அன்பு

எதுவுமே நிரந்தரம் இல்லனு
அறிவுக்கு தெரியுது
ஆனா மனசு அதை
ஏற்க மறுக்கிறது

நம்பிக்கை உடையவன் தான்
அசாதியத்தை சாதியமாக்குவான்

நமக்கு வரும் சவால்கள் தான்
வாழ்க்கையின் உண்மையான ஆசிரியர்கள்

உண்மையான மகிழ்ச்சி
என்பது ஒருவரின் ஆற்றல்
மற்றும் திறமைகளை
முழுமையாகப்
பயன்படுத்தும் வாய்ப்பே

வலி தரும் நினைவுகளே
நம் உள்ளத்தை
வலுப்படுத்தும் பாடமாக
மாறுகின்றன

காதல்
நேசிக்கபடுவதும்
வெறுக்கபடுவதும்
அவரவரின் அனுபவத்தை
பொறுத்தே

வெறுத்து போகிறவர்களை
விரட்டிப் பிடிப்பது தவறு என்று
அறிவுக்கு தெரிந்தாலும்
இதயத்திற்கு தெரிவதில்லை

சந்தோஷம் தேடி ஓடாதே
மனசில் விதை போட்டு
வளர்த்தால் போதும்

ஒரு சிறிய மின்னல் கூட
இருளை அழிக்க முடியும்
ஒரு சிறிய முயற்சி கூட
வாழ்க்கையை மாற்ற முடியும்