✨ கவிதை
☰
🏠
முகப்பு
💖
காதல்
content_copy
உன்னைச் சுற்றி
நடப்பவற்றை அமைதியாக
கவனிக்க தொடங்கினாலே
நீ எடுக்கும் முடிவுகள்
தெளிவாக இருக்கும்
content_copy
நிறைவேறிய லட்சியம்
நிறைவேறா ஆசை
கனவுக்குள் உறங்கும்
கல்லறைத் தோட்டம்
content_copy
நினைத்திருக்கவில்லை
இறந்த காலத்தில்
இத்தனை ரம்மியம்
இருந்திருக்குமென்று
கடந்த நாட்களெல்லாம்
வெறும் நினைவுகளாய்
போய்விடுமென்றும்
content_copy
மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
இல்லாவிட்டால் வாழ்க்கை
சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும்
content_copy
கடந்து சென்றவை
அனைத்தும்
பாதைகள் அல்ல
நாம் கற்றுக்கொண்ட
பாடங்கள்
content_copy
பிரச்சினைகளை கண்டு பயந்து
பின் வாங்காதீர்கள்
காற்றை எதிர்த்தே
பட்டங்கள் மேலே
செல்கின்றன
content_copy
மௌனம் பேசும்போது
இதயம் தான்
பெரும் உரையாடல் நடத்துகிறது
content_copy
விரும்பியதை அடைய
முடியாவிட்டாலும்
முயற்சி செய்ததை
விட்டுவிடாதே
content_copy
இதற்கு மேலும்
ஒன்று உண்டா
என வினவிய
வினாக்களுக்கு
பதிலாகவே அமைந்தது
இந்த வாழ்க்கை
content_copy
சில வார்த்தைகளால் மட்டுமல்ல
என் முழு உயிரால்
உன்னைக் காதலிக்கிறேன்
📖 பக்கம் 35 / 606
arrow_back
arrow_forward
📋 Copied