வெற்றிக்கு வழி கேட்காதே
நீயே ஒரு பாதை ஆகிவிடு

சோகமான தருணங்களில் தான்
உண்மை உறவுகள் தெரிகின்றன

மொழியோ முத்தமோ
விரும்பி சுவைக்கணும்
திணிக்கப்படாது

நம்முடன்
பயணிக்கும் உறவுகளின்
உண்மைத்தன்மையை
ஆராயத் தொடங்கினால்
வாழ்வே சூனியமாகிவிடும்

என் புன்னகைக்கு
பின்னால் உள்ள வலி
என்னை புரிந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்
கடந்து செல்கிறேன்
காலம் மாறும்
என்ற நம்பிக்கையில்

முடியாது என்பது
மூடநம்பிக்கை
முடியுமா என்பது
அவநம்பிக்கை
முடியும் என்பது
தன்னம்பிக்கை

நண்பர்கள்
இல்லாமல் வாழ்க்கை
இசையில்லா பாடல் போல

நேரத்தை நம்பாமல்
முயற்சியை நம்பு
நேரம் சோர்வுக்கு இடம் தரும்
முயற்சி வெற்றியை தரும்

காலம் எல்லாவற்றையும் மாற்றும்
ஆனால் நினைவுகளை அல்ல

எத்தனை கோபத்திலும்
வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்
அடிகளை விட
அது தரும் வலிகள் அதிகம்
பின் எத்தனை மன்னிப்புகள்
கேட்டாலும் மாறாது மறையாது