நம்பிக்கையும் நிதானமும்
உங்கள் வெற்றிக்கான
இரகசியங்கள்

நாம் அழிவதை
பலர் வரவேற்றாலும்
நம் முன்னேற்றத்தை
விரும்பும் சில
உண்மையான
நல் உள்ளங்களை
வாழ்வில் சம்பாதித்து
வைத்துக் கொள்ள வேண்டும்
சில உண்மை உறவின் தேடல்

தோல்விகள் வழிகாட்டும் துணைதான்
வெற்றிக்குப் பின்தங்கும் நிழலல்ல

நேற்று விழுந்த இடத்தில்
இன்று நின்றால்
அதுவே முன்னேற்றம்

தொலைவு அதிகமா இருந்தாலும்
பயணத்தை நம்பி நடந்தால்
வெற்றி நம்மை தேடி வரும்

வாழ்க்கை வாழ பல
வருடங்கள் இருப்பினும்
வாழ்க்கை மாற சில
நிமிடங்கள் போதும்

இனிமேல் எந்த
உறவும் வேண்டாம்
உறவுகளை நேசித்ததற்கு
அவர்கள் தந்த பரிசு
வலி கண்ணீர் தனிமை

விழுந்த இடத்திலிருந்து
எழுந்தால் தான்
நாம் எவ்வளவு பலமாக
இருக்கிறோம் என்பதை
காண முடியும்

எதுவாக இருந்தாலும் சரி
மூழ்கிவிடாதே
மிதக்க கற்றுக்கொள்

வலிகள் பொதுவானவைதான்
என்றாலும்
எல்லா வலிகளையுமே
வெளிப்படுத்தனும்னு
அவசியம் இல்லை
சில வலிகள்
நமக்கே நமக்கானது
அதை வெளிப்படுத்தாமல்
இருப்பதே
அந்த வலிக்கு மதிப்பு