இழப்பதற்கு எதுவும்
இல்லாதவர்களிடம்
உங்கள் பெருமையை
காட்டாதீர்கள் அவர்கள்
பெருமை கொள்ளும்
அளவிற்கு உதவுங்கள்

போராட்டத்தின்
முடிவில் தான்
புத்துணர்ச்சி நிறைந்த
வெற்றியை காணலாம்

சிறு முயற்சியும்
சரியான நேரத்தில்
வெற்றிக்குக் கதவாகும்

நான் உண்மையில் நல்லவன்
நீ என்னை ஏமாற்றாத வரை

முடியாது என்ற வார்த்தை
காற்றில் போடாதே
அது அடுத்தவரின்
நம்பிக்கையாக மாறக்கூடும்

தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால்
கிடைப்பதேவெற்றி

எனக்கு தனிமை கொஞ்சம்
அதிகமாகவே பிடிக்கும்
ஏன்னெனில்
என் மனதை காயப்படுத்த
அங்கே யாரும் இல்லை

ஒவ்வொரு மலர்களுக்கும்
ஒவ்வொரு மனம் உண்டு
ஒவ்வொரு மனிதருக்கும்
ஒவ்வொரு குணம் உண்டு
இவை இரண்டையும்
மாற்ற முடியாது

தடைகள் நம்மை சோதிப்பவை
அவற்றை எதிர்கொள்வதே ஆற்றல்

வாழ்வில்
இரு போராட்டம்தான்
ஜெயித்தவர்
தக்கவைத்துக்கொள்ளவும்
தோற்றவர் ஜெயிக்கவும்
போராடுகிறார்