வாழ்க்கை ஒரு வினாடிப் போர்
ஆனால் நம்முடைய மனம் தான்
சாமர்த்தியமிக்க யுத்தக் கருவி
வாழ்க்கை ஒரு வினாடிப் போர்
ஆனால் நம்முடைய மனம் தான்
சாமர்த்தியமிக்க யுத்தக் கருவி
நம்பிக்கையின் சிறு ஒளி
ஆயிரம் இருளை கிழிக்கக் கூடும்
வழியே இல்லையென
நினைக்கும் தருணங்களில் தான்
புதிய பாதைகள் உருவாகின்றன
பிறர் கனவுகளை கண்டு
பொறாமைப்படாதே
உன் கனவுகளை உருவாக்கு
இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை
முடிவெடுக்கத் தயங்காதே
முயற்சி எப்போதும்
முதலில் வர வேண்டும்
நிகழ் காலத்திற்கு இலையாக
இறந்த காலத்திற்கு சருகாக
எதிர்காலத்திற்கு உரமாக
முக்காலத்திற்கும்
பொருந்துகிறது ஓர் இலை
அடுத்தவர்களின்
கண்களுக்கு
எப்படியோ
என் விழிகளுக்கு
உலக அழகி
என் அன்னையே
ஆறுதல் என்பது
உன் காயத்திற்கு
தற்காலிக தீர்வு
மாறுதல் என்பது
உன் காயத்திற்கு
நிரந்திர தீர்வு
எப்பொழுதும்
ஆறுதல் தேடாதே
மாறுதல் தேடு
சில நேரங்களில்
பின் வைத்த காலும்
வெற்றி தரும்