பிறருக்காக
இரக்கப்படுவதில் தவறில்லை
ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஓநாய்க்காக வருந்துவது
என்பது முட்டாள்தனமே

இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கைகொடுக்கும்
அடுத்தவர் கையை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம்

மனதில் இருப்பதை
காட்டி கொடுப்பதால்
என் கண்ணும்
உன் அடிமையே

முள்ளின் திறமை
என்னவென்றால்
தன்னை காலால்
மிதித்தவனை
தன் கையாலேயே
எடுக்க வைப்பது

என்னதான்
நம் வாழ்வில்
ஆயிரம் மாற்றங்கள் ஏற்பட்டாலும்
அவை இழந்தநினைவுகளை
மீட்டுத்தருவதில்லை

எதையும் எதிர்கொண்டு
வாழ்வோம்
என்ற துணிச்சல்
மட்டும் இருந்தால்
நாளை வரும் துன்பங்களை
கூட துரத்தி அடிக்கும் என்பதை
என்றும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்

கண்களில் மிதந்த
காட்சியெல்லாம் சில
நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது

உண்மையான அன்பு
உள்ளத்தில் மட்டுமல்ல
உணர்விலும்
கலந்திருக்க வேண்டும்

தோல்வி உன்னை
துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு

நமக்கு பிடித்தவர்களிடம்
கெஞ்சவும் 🙏
நம்மை பிடித்தவர்களிடம்
கொஞ்சவும் 😘
அதீத அன்பு மட்டுமே
காரணம் 😍
அந்த தருணங்கள்
பேரழகு 😍