இன்று ஆரம்பித்தால்
நாளை சாதிக்கலாம்
காலம் கடந்தால்
கனவுகள் கூட சலித்துவிடும்

பிறரை காயப்படுத்தாத
புன்னகையும்
தன் காயத்தை மறைக்கும்
புன்னகையும்
என்றுமே பேரழகு

மரியாதை கிடைக்காத
இடத்தை விட
அதீத மரியாதை
கிடைக்கும் இடங்களில்
கவனமாக இருத்தல் நலம்

சில தோல்விகள்
சிறந்த ஆசிரியர்களாக
மாறுகின்றன

யாருக்கு எப்போது
என்ன நடக்கும்
என்றே தெரியாது
இருக்கும் வரை
வன்மம் இல்லாமல்
அன்பை மட்டுமே
விதைப்போம்

யாரும் யாருக்காகவும்
உண்மையாக இருக்க
வேண்டிய அவசியமில்லை
தன் மனசாட்சிக்கு
உண்மையாக
இருந்தாலே போதும்

ஒரு சூழ்நிலை
உன்னை பாதிக்காது
அதற்கு நீ கொடுக்கும்
முக்கியத்துவமே
உன்னை பாதிக்கும்

நீங்கள் அனுபவித்தால்
அது உங்கள் அறிவு
பிறரையும் அனுபவிக்கச்
செய்தால் அது
உங்கள் நற்பண்பு

பிடித்தவர் பிடிக்காமல்
போகும் போது
திமிர் பிடித்தவர் என
பட்டம் கொடுக்கிறது
மனித மனம்

வாழ்க்கையின்
வேகத்தைக் கண்டு
முறிந்து போய் விடாதே
பிரச்சனைகளுக்கு
ஏற்ப வளைந்து
கொடுத்து செல்ல
பழகிக் கொள்