இன்று கஷ்டப்பட்டால்
நாளைய வெற்றியின்
சுவை இன்னும் இனிக்கும்

கடினமான நாட்கள்
தேவையானவை
மனதை உருக்கி
வாழ்வை செதுக்க

சிரித்த நிமிடங்களை விட
அழுத நிமிடங்களே
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை
(ஞாபகங்கள்)

துணியாத வரை
வாழ்க்கை பயங்காட்டும்
துணிந்து பார்
வாழ்க்கை வழி காட்டும்

வெற்றி அருகிலிருக்கிறதா
என பார்க்காதே
நீயே அதற்கு அருகிலே செல்

தீவிரமான முயற்சி
ஒருவேளை பயனில்லை
என தோன்றும் ஆனால்
அது தொடர்ந்தால்
பெரும் வெற்றி தரும்

குறிக்கோள்கள் எப்பொழுதும்
உயரியதா இருக்கனும்

நீங்கள்
தவறவிட்ட வாழ்வு
உங்களுக்கானது இல்லை
என்பதை
உறுதி செய்து கொள்ளுங்கள்
உங்களுக்கான வாழ்வு
என்பது
நீங்கள் வாழ்ந்து
கொண்டிருப்பது மட்டுமே

உழைத்த பின் வரும் சாதனை
தூக்கத்தில் காணும்
கனவுகளை விட இனிமையானது

கடினமான காலங்கள்
உனக்கு புதிதான திறமைகளை
புகட்டும் ஆசிரியர்கள்