வலி கண்ணீர்களில் தான்
இருக்கிறது என்று அர்த்தமல்ல
அது சில பொய்யான
சிரிப்பிலும் மறைந்து இருக்கும்

உயர்ந்த
சிந்தனைகள் மட்டுமே
ஒருவனை உயர்த்தி விடாது
சிறப்பான சிந்தனைகளை
செயலாக்கம் செய்யும் போது
உன்னை விட உயர்ந்தவன்
எவனும் கிடையாது

முயற்சி நிற்காமல் தொடர்ந்தால்
அதிர்ஷ்டம் உன் கதவைத் தட்டும்

நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது

யாரேனும் உன்னிடம்
பொறாமை கொண்டால்
அது உன் வளர்ச்சிக்கு
உண்மை சான்று

எதிர்பார்க்கும் போது
எதிர்பார்த்தவர்கள்
பேசவில்லை என்றால்
அதிகமாகவே வலிக்கிறது

ஒவ்வொரு தடையும்
ஒரு புதிய வாய்ப்பு
மறைத்து வைத்திருக்கும்

யாரும் இல்லாத நேரத்தில்
நீயே உனக்கு தோழனாக இருந்தால்
வாழ்க்கை சோர்வடையாது

சில நேரம் தடைதான்
வழிகாட்டியாக மாறுகிறது

உனக்கு துணை என்று
பிறரை நினைக்காதே
அவர்கள் தேவை தீர்ந்ததும்
விலகி விடுவார்கள்
அந்நிலையில் புரியும்
இவ்வுலகில் உனக்கு துணை
நீ மட்டும் தான் என்று