மகிழ்ச்சி வேண்டுமானால்
பணம் சார்ந்ததாக இருக்கலாம்
ஆனால் நிம்மதி என்றும்
மனம் சார்ந்ததுதான்

கனவுகள் கலைந்தாலும்
நினைவுகள் அழகு
கற்பனைகள் தீர்ந்தாலும்
காதல் அழகு

நீ உட்கார்ந்துவிட்டால்
படுத்துக்கொள்ளும்
உன் வெற்றி

வெற்றிடத்தின் வலி
உணர்த்தவில்லை என்றால்
அங்கு அன்பே இல்லை

உங்கள் முயற்சிகள்
உங்கள் விருப்பத்தை
அடையும்

கடந்ததை நினைத்து
கவலைப்படாதே
அது உன்னை
கற்றுக் கொடுத்த ஆசிரியன்

பதிலளிக்கும்
நோக்கத்துடன்
இல்லாமல்
புரிந்துகொள்ளும்
நோக்கத்துடன்
எதையும் கேளுங்கள்

ஏழைமை ஒரு குறை இல்லை
முயற்சி இல்லாமையே குறை

அன்பெனும் பிடிக்குள்
அகிலமே அகப்படும்
ஆயுள்கைதியாய்
விடுதலைபெற
விருப்பமேயின்றி
நீ மட்டும்
விதிவிலக்கா என்ன

விளக்கங்கள் கொடுக்கப்பட்ட
போதிலும் புரிந்துகொள்ளாமல்
ஒதுக்கப்படுவது புத்தகங்கள்
மட்டும் அல்ல மனிதனின்
உணர்வுகளும் தான்