சூறாவளி வந்தாலும்
மரத்தின் வேர்களை போல
உறுதியுடன் இருங்கள்

வெற்றியாளர்கள் தோல்வியில்
பயம் கொள்ளாமல்
முன்னேறுவார்கள்

சில நேரங்களில்
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
தனிமையில் இருப்பதே மேல்

உன்னை சுற்றி உள்ளவர்களை
நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க
விரும்பினால் முதலில் நீ
மகிழ்ச்சியாக இரு

கத்துக்க ஆயிரம்
விஷயம் இருக்கலாம்
ஆனால்
அத கத்துக்குற
நிலமையில
நாம இருக்கனும்
அப்படி இல்லைனா
வாழ்க்கை
நமக்கு நல்லா
கத்துக்குடுத்துட்டு போயிரும்

நாளை பற்றி கவலைப்படாமல்
இன்றை நிம்மதியாக வாழ்வதே
புத்திசாலித்தனம்

என்னை குத்தி
கூர் பார்த்த கத்தி
என்னால் தீட்டப்பட்டது
என்பதே என்னின் வலி
துரோகம்

இருள் அதிகமானபோது தான்
நட்சத்திரங்கள் தெளிவாக தெரியும்

சரியோ தப்போ உன்
வாழ்க்கையை நீ வாழு
இங்க சரி தப்பு சொல்ல
யாரும் ஒழுங்கு இல்ல

வாழ்க்கை ஒரு இசை
அதை கேட்க கற்றுக்கொண்டவனுக்கே
அதன் அழகு புரியும்