ஒவ்வொரு முறையும் அன்பை
நிருபித்துக் கொண்டே இருக்க
முயற்சி செய்யாதீர்கள் அது
தற்கொலையை விட கேவலமானது

இப்பிரபஞ்சம்
அன்பால் சூழ்ந்த
அன்பின் மையம் கொண்டது
அன்போடு வாழ்வோம்
அன்பு கொண்டு வாழ்வோம்
எந்த சூழலிலும்
நமக்கானவர்கள் நம்மிடம்
வெளிப்படுத்தும்
நம்மை வாழ்த்தும்
அன்பு கொண்ட
நெஞ்சம் இருக்கும் வரை
இவ்வாழ்வு பேரன்பின்
அழகை சார்ந்தது

பிறருடைய குற்றம்
காண்பது எளிது
தன்னுடைய குற்றம்
காண்பது கடிது

பொறாமை கொண்டவன்
எப்போதும் மற்றவரின்
உயரத்தை அளவிடுவான்
ஆனால் உழைப்பவன்
தனது உயரத்தை உருவாக்குவான்

காதலித்து
ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக
நினைத்து
ஏமாந்தவர்களே
இங்கு அதிகம்

அதிகம் நம்பாதே
அதிகம் நேசிக்காதே
அதிகம் அக்கறை காட்டாதே
காரணம் அதிகம் என்பது
நமக்கு அதிகம் வலியை தரும்

பழகிடும் உறவுகள்
விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தாங்காது

சில கண்ணீர்கள்
இதயம் மட்டும்
புரிந்துகொள்ளும் மொழி

வாழும் இந்த
வாழ்க்கையில்
எதுவும் நிரந்தரமில்லை
உண்மையும் இல்லை

நம்பிக்கை இல்லாத வாழ்க்கை
பறவையில்லாத வானத்தைப்போல்
வெறுமை மட்டுமே இருக்கும்