வாழ்வின் மகிழ்ச்சி
எவ்வளவு பெற்றோம் என்பதிலல்ல
எவ்வளவு பகிர்ந்தோம் என்பதில்

மரணத்திற்குப் பிறகும்
வாழ்க்கை உண்டா
என்று கேட்காதே
உயிருடன் இருக்கும்
போது நீ எப்படி
வாழ்ந்தாய் என்று பார்

முயற்சி செய்யாதவர்கள்
தோல்வியை பற்றி
மட்டும் பேசுவார்கள்

நம்மை விட்டு
யாராவது பிரியும் போது
நமக்கு வலித்தால் அதில்
அவர்கள் காட்டிய
பாசம் தெரியும்
அப்படி நமக்கு
வலிக்கவில்லை என்றால்
அந்த உறவின் வேஷம்
தான் காரணமா இருக்கும்

நீயுமா இப்படி
என்ற வார்த்தையில்
மிச்சமிருந்த ஒருதுளி
நம்பிக்கையும் உதிர்ந்துபோன
வலியிருக்கும்

வலி என்பது
மனதைக் குறைக்க அல்ல
அதை நுட்பமாக்கும் அனுபவம்

சோகம் ஒரு நிழல் மாதிரி
வெளிச்சம் வந்தால்
அது மறைந்து விடும்

உறுதியான மனிதருக்கு
தோல்வி என்று எதுவுமில்லை
போகும் பாதையில் கற்றுக்கொள்ள
பாடங்கள் மட்டுமே உள்ளன

கடுமையான போராட்டங்கள்
வாழ்க்கையின் இனிமையான
வெற்றிக்கு வழிகாட்டும்

மனசு இருட்டில் மூழ்கும் போது
வெளிச்சம் கூட பயமுறுத்தும்