பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி
பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து
சில காயங்களுக்கு பிரிவு மருந்து
எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து
அமைதி
வாழ்நாள் குறுகியது
ஆனால் நல்ல மனசு கொண்டவர்
என்றும் நிலைப்பார்
சாதிக்க முடியாத
இலக்கை
வாழ்க்கை கொடுக்கும்போது
அழிக்கவே முடியாத
தடயத்தை
அந்த வாழ்க்கையில்
பதியவைத்துவிட்டு
செல்வது தான்
திறமையின் சிறப்பு
என்னிலடங்கும்
என் இதயத்துடிப்பில்
ஏனோ எண்ணிலடங்கா
உன் நியாபகங்கள்
சோகமான உணர்வுகள்
சில சமயம் நம்மை
நம் உண்மை நிலைக்கு
கொண்டு சேர்க்கும்
நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி
நினைத்ததை முடிக்கும்
வரை செய்வதே
உண்மையான முயற்சி
மழை தரும்
குளிர்ச்சியைப் போல்
அமைதி தரும்
மன நிறைவை
வாழ்க்கை முழுவதும்
காக்க வேண்டும்
வா வாசமில்லா மலர்களுக்கும்
வாசம் கொடுப்போம்
இயற்கையைத் தாய் போல்
கண்டு மதிப்போம்
ஒவ்வொரு மகிழ்ச்சியும்
வரம் என்பது துன்பங்களை
கடந்தவனுக்கே தெரியும்
சிறிது நிம்மதியாய்
இருப்பதாய் உணரும்
தருணங்களில்
புதிதாய் அலங்கரித்து
எங்கிருந்தோ வருகிறது
ஏதேனும் ஓர்
பழைய பிரச்சனை