மேலோட்டமாக
சிந்திக்கும் போது
எல்லாம்
சாதாரணமாக தெரியும்
செயல்படுத்தும்
போது தான்
அதில் இருக்கும்
சிரமங்கள் புரியும்
சரியான
திட்டமிட்ட செயல்பாடு
மட்டுமே
வெற்றியை சேர்க்கும்

ஒருமுறை துவங்கிவிட்டால்
உன் இலக்கு உன்னிடம்
நெருங்கும் வரை நின்றிடாதே

எப்போதெல்லாம்
இது போதுமென்று
நம் மனம்
சந்தோசப்படுகின்றதோ
அப்போதெல்லாம்
நம் வாழ்க்கை
சந்தோசமாகிவிடுகின்றது

வாழ்க்கையில்
அழிய கூடிய
புறத்தின் அழகு
கிடைத்தும் பயனில்லை
அழியா அகத்தின் அழகு
கிடைக்காவிட்டால்
வாழ்க்கைக்கு பயனில்லை

அவரவருக்கு
நிகழாத வரை
நிகழ்வது எல்லாம்
வெறும் செய்தி தான்

நடந்த பாதைகள் எல்லாம்
நியாயமானவை அல்ல
சில சுமைகளால் உருவானவை

துன்பத்தின் நடுவிலும்
நம்பிக்கை பூத்தால்
அதுதான் உண்மையான ஆற்றல்

நாம் நினைப்பதை விட
சில மனிதர்கள் நம்மை
விரைவாக மறந்து விடுவார்கள்

நீ வாழும் வாழ்க்கை
உன் கதையை எழுதும்
அதை அழகாக
எழுதிக் காட்டுவதே
உன்னுடைய வேலை

உறவுகளும் உடைபொருள்
போன்றே உடைந்தால்
மீண்டும் இணைக்கலாம்
எக்கணத்திலும்
முன்போல் வராது