நம் நிலை கண்டு கை கொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட வைப்பதே
வெற்றிகரான வாழ்க்கையின் அடையாளம்

கணத்தில் உதித்த
புன்னகையால்
மனத்தின் கனம் குறைந்தது
(மழலைகள்)

மௌனத்தில் மூச்சும் கூட
சலனமாக இருக்கிறது

உலகிலே
மிக ஆபத்தான பயணம்
எதுவென்றால்
நல்லவர்களாய் நடிப்பவர்களோடு
நம்பிக்கையோடு பயணிப்பது

வாழ்க்கையில் கடினமான
இலக்கை அடைய
முயலுங்கள் நீங்கள்
வென்றால் அதனை
வழிநடத்தலாம்
தோற்றால் வழிகாட்டலாம்

அன்பு காட்டி சிலரும்
காயப்படுத்தியே சிலரும்
மனதில் நீங்கா இடம்
பிடித்து விடுகிறார்கள்
இரு வித மனிதர்களை
மறக்கவே முடிவதில்லை

நேற்றைய குறைகளை
நினைத்து வருந்தாதே
இன்று புதிய முயற்சியை
ஆரம்பிக்க தயங்காதே

தூரம் என்பது முக்கியம்
அல்ல எடுத்து வைக்கின்ற
முதல் அடி தான் முக்கியம்

சில நேரங்களில்
அதிக அன்பு கூட
பயனற்றது

கிடைக்கும் என்பதில்
பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா
என்பதில்
தான் பிரச்சனை
(அன்பு)