எழுதப்படாமல்
விட்ட எண்ணற்ற
காவியங்களை விட
வாசிக்கப்படாமல்
வைக்கப்பட்ட
காவியங்களுக்கே
வலி அதிகம்

விடைகள்
சில தேடுகையில்
வினாக்களே
பல எழுகின்றன
வாழ்க்கையில்

உங்களால் உண்மையாக
இருக்க முடியாதபோது
போலியான வாக்குறுதிகளை
அளிக்காதீர்கள்

யாரால்
கொண்டாட படுகிறோமோ
அவர்களாலேயே
தூக்கி எறியப்படுவோம்
தேவை முடிந்த உடன்

வாழ்க்கை ஒரு கடல் மாதிரி
சில நேரம் அலைகள்
நம்மை உயர்த்தி நிறுத்தும்
சில நேரம் கீழே தள்ளும்
ஆனாலும் மிதந்துகொண்டே
இருக்க வேண்டியது
நம்முடைய மனசு

உன் கவலைகளை
இங்கு எவரிடமும்
விளம்பரப்படுத்தாதே
ஏனெனில் அவற்றை
வாங்குவதற்கு
எவருமில்லை
ஆறுதல்
என்ற பெயரில்
விளையாடவே
பலர் காத்திருக்கிறார்கள்

சில நேரங்களில்
நம்மை யாரும் புரிந்துகொள்ளாதது
அதிகமான துன்பத்தை கொடுக்கும்
ஆனால் அந்த துன்பமே
நம்மை நம்பிக்கையுடன்
முன்னேற வைக்கும்

கடலுக்குள் மட்டுமே ஆழம் இல்லை
சில வாழ்க்கைகளும் அளவுக்கடந்த
ஆழத்தில் நடக்கின்றன

சில வலிகள்
கண்ணீராக வெளிப்படும்
சில வலிகள் அமைதியாக
நம்மை உள்மனதில் அழுத்தி விடும்

தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால் கிடைப்பதேவெற்றி