வீழ்வதை விட
மீண்டும் எழுவது தான் முக்கியம்
ஏனென்றால்
வெற்றி கிடைக்கும் வரை
போராடவேண்டும்
வெற்றி என்பது
மற்றவர்களால் வழங்கப்படும்
பாராட்டு அல்ல
நம் முயற்சி
நமக்கே தரும் திருப்தி
விடையில்லாத கேள்விகளும்
தீர்வில்லாத பிரச்சினைகளும்
எல்லோர் வாழ்விலும் உண்டு
புன்னகைத்துக் கொண்டே
கடந்து செல்வதில் தான்
சாமர்த்தியம் இருக்கிறது
வாழ்க்கை ஒரு கதை அல்ல
அதை எழுதுவது நீ தான்
ஆசைப்படுவது எல்லாம்
அனுபவமாக கிடைக்கிறது
உதட்டில் புன்னகை
மட்டும் மாறாமல்
மனிதன் தோற்று போக
ஆயிரம் விஷயங்கள்
இருந்தாலும்
துரோகத்தால் விழ்த்தப்படும்
போது தான்
உடைந்து போகிறான்
பொழியும் மழைத் துளிகளுக்கு
தெரிவதில்லை பல உயிர்களின்
தாகத்தை தீர்க்கத் தான் சென்று
கொண்டு இருக்கிறோம் என்று
எல்லாம் சரியாக
இல்லாத நாள்களே
நம்மை உண்மையாக்கும் நாட்கள்
நீ எவ்வளவு
உண்மையாக இருந்தாலும்
ஒருவரின் மனதில்
நீ தவறானவனாக இருக்கலாம்
அதை மாற்றுவதற்காக
உன் உண்மையை மாற்றாதே
பயம்
மனதை முடக்கும் பூட்டு
தன்னம்பிக்கை
அதை திறக்கும் சாவி
📖 பக்கம் 320 / 622
📋 Copied