தோல்வி உன்னை சோதிக்கும்
ஆனால் அதுவே
உன்னை உருவாக்கும்
மாறாதது வாழ்க்கை அல்ல
மாற கற்றுக்கொள்ளாத
மனமே பிரச்சனை
கவலையை உன்
காலுக்கு கீழ்
கொண்டு வா
தூக்கி சுமக்காதே
செருப்பாக உழைத்தாலும்
சேமித்து வைக்க
பழகுங்கள் வாழ்க்கை
அறுந்தால் தைப்பதற்கு
நிச்சயம் உதவும்
கேட்காத கேள்வியும்
சொல்லாத பதிலுமாய்
நகர்கிறது நாட்கள்
கேள்வியும் பதிலும்
சந்திப்பது எப்போதோ
மழை நம் கண்களை
மறைக்கலாம்
ஆனாலும் உள்ளம் சிந்தும்
கண்ணீரை மறைக்க முடியாது
தோல்வி இதயத்துக்கு
போகக் கூடாது
வெற்றி தலைக்கு
போகக் கூடாது
எண்ணங்களும் நோக்கங்களும்
சரியாகவும் உண்மையாகவும்
இருந்து விட்டால்
உறவுகளை
உருவாக்க வேண்டிய
தேவை இல்லை
தானாகவே அமைந்து
விடுகிறது
சில நேரங்களில்
சில இடங்களில்
பார்வையாளராக
இருப்பது மட்டுமே
சாலச் சிறந்தது
மழை பெய்தாலும்
சூரியன் மீண்டும் உதிக்கும்
📖 பக்கம் 317 / 606
📋 Copied