மூச்சு விடுவது வரை
முயற்சியை விடாதே
வெற்றியும் உன்னை
கைப்பற்றும் வரை
பார்க்காதே

வெற்றி வருவது
நேரம் தந்த பரிசு அல்ல
உழைப்பின் பதில்

லட்ச நட்சத்திரங்கள்
கண்ணுக்கு தென்பட்டாலும்
ஒற்றை நிலவே
மனதில் நிலைத்து நிற்கிறது

தயங்குபவர்களுக்கும்
பயப்படுபவர்களுக்கும்
இந்த உலகில்
எதுவும் சாத்தியமில்லை
துணிவும் முயற்சியும்தான்
தன்னம்பிக்கையின்
உச்சக்கட்டம்
வெற்றியின் முதற்படி

மனதை புரிந்தவர்கள்
அருகில் இல்லாததால்தான்
சில சோகங்கள்
அழுகையாக மாறிவிடும்

வாழ்கையில் உன் மீது
உனக்கே நம்பிக்கை
இல்லை என்றால்
அந்த கடவுளே
நேரில் வந்தாலும்
பயன் இல்லை

அன்பின்
வெள்ளத்தில் தான்
மனிதம் வாழ்கிறது

முடியும் என்ற
நம்பிக்கையில் தான்
ஆரம்பிக்க வேண்டும்
முடிவுகள் பிறகு வரட்டும்

தோண்டித் தோண்டிப்
பார்த்தாலும் எல்லா
வேர்களுமே அழுக்காக
தான் இருக்கும்

அடுத்தவர்
ரசிக்கும் அளவிற்கு
வாய் விட்டு சிந்தும்
புன்னகையில்
சொல்ல முடியாத
சோகங்கள் மறைந்தே
இருக்கிறது