இதயம் ஒரு விளோநமான
சிறை ஏனென்றால்
இதில் குற்றம் செய்பவர்கள்
மாட்டிக்கொள்வதில்லை
பாசம் வைப்பவர்கள் தான்
மாட்டிக்கொள்கிறார்கள்

உனக்கே உரியதை
உனக்கே அடைய
தைரியமாக இரு

வீழ்வதை பயமாக நினைத்தால்
எழுவதற்கான வாய்ப்பை
இழக்க நேரிடும்

நேரம் விடுபட்டாலும்
நம்பிக்கையை விடக்கூடாது

போலியான உபசரிப்புகளை விட
உண்மையான திமிர் அழகானது
பெருந்தன்மையாக நடிப்பதை விட
இயல்பான அகம்பாவம் மேலானது

என்றும் அஞ்சியே
வாழ்ந்தால் இறுதி
அஞ்சலியே நிகழ்த்தப்படும்
துச்சமென்று துணிவுடன்
நடந்தால் வாழ்வு
நம் வசப்படும்

ஆயுள் குறைவென்றாலும்
அனைவராலும் ரசிக்கபடும்
மாதமாகவே இருக்கின்றது
பெப்ரவரி...!

விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே

காலம் கற்றுத்தரும் பாடம்
புத்தகத்தைக் காட்டிலும் ஆழமானது

தொடர்ந்து சிந்திக்கும்
மனதை விட
தொடங்கி செயல்படும்
மனம் தான் வெற்றி தரும்