சில சோகங்கள் சொல்லப்படாது
அவை மௌனத்தில் சத்தமாக கத்தும்
நேற்று என்பது
ஒரு முடிந்து போன கதை
இன்று என்பது
உன் கையில் இருக்கும்
வெற்றுத் தாள்
அழகாக எழுதத் தொடங்கு
முயற்சி செய்ய தயங்காதே
முயலும் போது முட்களும்
உன்னை முத்தமிடும்
தூரம் என்பது
இடங்களுக்கு தான் நம்
இதயத்துக்கு அல்ல
தானாக உயரும்
வயது
விடாமல் துரத்தும்
காலம்
தடுக்க முடியாத
நேரம்
கடக்கத் துடிக்கும்
இளமை
காலைத் தடுக்கும்
சமூகம்
தொட வேண்டிய
இலக்கு
இத்தனை போராட்டம்
தான் வாழ்க்கை
சிலவற்றை
ஆராயாதே
மன நிம்மதி
நீங்கிவிடும்
எல்லாம் சரியாகும்
என்ற நம்பிக்கை தான்
முன்னே செல்ல உதவும்
வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள்
பாதை காட்டுவார்கள்
ஆனால் பாதையை
தேர்வு செய்வது நாம்தான்
சிலர் நமக்கு
மனவலிமை தருகிறார்கள்
சிலர் நமக்கு
மனவலியை தருகிறார்கள்
மனவலிமையோடு மனவலியை
கடந்து செல்வோம்
இயற்கையோடு இணைந்து
போகும் போது
மனம் நிறைந்த
அமைதி கிடைக்கும்
📖 பக்கம் 312 / 606
📋 Copied