பதில்கள் இல்லாத கேள்விகளும்
வாழ்க்கையை ஆழமாக உணர வைக்கும்
பதில்கள் இல்லாத கேள்விகளும்
வாழ்க்கையை ஆழமாக உணர வைக்கும்
தோல்வி அடைந்ததும்
துவண்டு போகாமல்
தோல்வி தற்காலிகமானது மட்டுமே
நிரந்தரமானதும் அல்ல
நிலைக்க வைக்கும் அளவிற்கு
நான் திறமை இல்லாதவனும் அல்ல
என்று முயற்சி கொண்டு போராடுங்கள்
வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்
தந்தைக்கும்
கடவுளுக்கும்
சிறு வித்தியாசம் தான்
எப்பவுமே கண்ணுக்கு
தெரியாதவர் கடவுள்
இருக்கும் வரை
தெரியாதவர் தந்தை
அதிகமாகவோ வேகமாகவோ
பேசாதீர்கள் தெளிவாகவும்
சுருக்கமாகவும் பேசுங்கள்
யாரை
பிரிந்த பின்
உன்னால் இயல்பாக
இருக்க முடியவில்லையோ
அவர்கள் தான்
உன் இதயம்
என்று புரிந்துக்கொள்
நிழலால் பயந்து ஓடும் வாழ்க்கை
வெளிச்சத்தையே மறந்து விடும்
மலையின் உச்சியில்
இருந்து விழுந்தாலும்
எனக்கு மரணமில்லை
இப்படிக்கு நீர்வீழ்ச்சி
ஒவ்வொரு உயிரும்
அன்பிற்காக
ஏங்கக் கூடியவை தான்
அதை நீ உணரும் வரையில்
உன் வாழ்க்கை நிலை பெறாது
தொடங்கிய பாதை
எவ்வளவு கடினமானாலும்
தொடரும் மனம் தான்
வெற்றியின் விதை
இலக்கை முடிவு செய்
அதை அடையும்
வழியை இறுதி செய்
பின் முயற்சி உன்
வெற்றியை உறுதி செய்யும்