நான் நானாக
இதுவரை யாருக்காகவும்
என்னை மாற்றிக்கொள்ளவில்லை
எனக்காக யாரையும்
மாற சொன்னதுமில்லை

நிரூபித்து கொண்டே
இருப்பததை விட பேசாமல்
இருப்பது நல்லது

தவறான புரிதலுக்கு
சரியான பதில் மௌனம்

சிலருக்காக சிலரை
பிடிப்பது போல் நடிப்பதும்
சிலருக்காக சிலரை பிடிக்காதது
போல நடிப்பதும் தான்
இன்றைய உறவுகள்

மகிழ்ச்சி என்பது சிரித்துக்
கொண்டு இருப்பது அல்ல
தனிமையில் இருக்கும்
போதும் எந்த வித
கவலையுமின்றி இருப்பது

உன்னை விட
சிறந்த காதலர்
யாரும் இல்லை
உன்னை நீயே
காதல் செய்யும் வரை

தேவை மட்டும்
இல்லையென்றால்
மனிதர்கள்
ஒருவருக்கொருவர்
பேசவே யோசிப்பார்கள்

வாழ்க்கையில் எதையாவது
சாதிச்சிட்டு நிம்மதியா
இருக்கலாம்
என்று நினைத்தால்
இப்போ இருக்கும் சூழ்நிலையில்
நிம்மதியா இருக்கிறதே
பெரிய சாதனைதான்
என்ற எண்ணம் வந்துருச்சு

ஏதோ ஒரு இழப்பிற்காக
வருந்தியதில் தவறில்லை
ஆனால்
அதே விஷயத்திற்காக
மறுபடியும் நினைத்து
வருந்துவதெல்லாம்
ஆகச்சிறந்த அறைவேக்காட்டுத்தனம்

நாளை எப்படி இருக்கும்
என்பதை எண்ணாதே
இன்று வாழ்வதிலேயே
வாழ்க்கையின் நெருக்கம் உள்ளது