உன் வாழ்க்கையை நீ
உண்மையாக நேசி

அதிக உரிமை எடுக்காதே
ஒருநாள் வெறுப்பாய்
வெறுக்கப்படுவாய்

அறிந்து கொள்ளாதவர்களிடம்
மனதை சுமந்து செல்பவனே
சோகத்தின் உச்சியில் இருக்கிறான்

நான் விடும் மூச்சு காற்றில்
தான் நீ வாழ்கிறாய் என்னை
அழிப்பது உன்னை நீயே
வதைப்பதற்கு சமம்
இப்படிக்கு மரங்கள்

வெற்றியின் போது
கை தட்டியவர்கள்
தோல்வியிலும் கைக்கொடுத்தால்
சோதனையில் இருந்து
எளிதாக சாதனை படைக்கலாம்

கதிரவன்
கண் விழித்த
பின்னும்
உன் அணைப்பில்
கண் மூடி கிடப்பதும்
சுகம் தான்

அரைநொடி நிகழ்வை
கூட ஆயுள் வரை
அசைபோடுவது
தான் வாழ்க்கை

பாவங்களுக்கு
எப்படியோ
மன்னிப்பு கிடைத்துவிடுகின்றது
நியாயங்கள்
தான் நிலுவையில்
நின்றுக் கொண்டிருக்கின்றன

வாழ்க்கையில்
ஒவ்வொரு விஷயமும்
அழகு தான்
அவற்றை ரசிக்க கூடிய
மனநிலையில் இருந்தாள்

ஓய்வில்லாமல் உழைப்பதால்
தான் கடிகாரம்
உயர்ந்த இடத்தை
அடைந்தது
நாமும் உயர வேண்டும்
என்று தன்னம்பிக்கை கொண்டு
உழைத்தால்
நிச்சயமாக உயரலாம்