வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்

வாழ்க்கை சிக்கலானது அல்ல
நம்முடைய எண்ணங்கள்தான்
அதை சிக்கலாக்குகின்றன

மௌனம் என்பது கண்ணீரின் நிழல்

சில உறவுகள்
நம் கற்பனையில்
மட்டும் தான் சொந்தம்
நிஜத்தில் அல்ல

வெளியே சிரிப்பது
தெரிந்தவர்களுக்கு
உள்ளே சிதைபட்டு
சிறைபட்டு கிடப்பது
தெரியவில்லை ஏனோ

நேசிக்கத் தெரியாத
மனிதர்களிடம் நேசத்தை
எதிர்பார்ப்பது முட்டாள்தனம்

எப்பவும் குறை மட்டும்
சொல்றவங்களுக்கு
வாழ தெரியாது வாழ
தெரிஞ்சவங்களுக்கு
குறையே தெரியாது

நாம் கவனிக்கப் படுகிறோம்
என்ற உணர்வே
நம் செயல்களை
மாற்றியமைக்கவும் வல்லது
ஆனால் தொடந்து
கவனிக்கப்படுகிறோம்
எனும் போது
நம் இயல்பு கெடவும்
வாய்ப்புண்டு

வெற்றி என்பது
மற்றவர்களை முந்துவது அல்ல
நம் பலவீனங்களை
வென்று முன்னேறுவது

கஷ்டங்களை
காதலித்து பார்
அதை நினைத்து
வேதனைப்படுவதைவிட
உனக்கென
வாழ்க்கை வெளிச்சத்தை
அது காட்டும்