சரியான நேரத்தில்
அமைதி காத்துவிடுவது
எதிர்காலத்தில்
மன அமைதியை
தேடி நிற்காமல் காக்கும்

சோர்வாக இருக்கும்
தருணத்தில் கூட
ஒரு சிறு முயற்சி
நாளைய பெரிய வெற்றியின்
விதையாக மாறும்

சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்

கடந்து செல்ல
கற்றுக்கொள்
உன்னை
குறை கூறுபவர்கள்
யாவரும்
உத்தமர் இல்லை என்பதை
நினைவில் வைத்து

எல்லோரிடமும் பணிவாக
நடந்து கொள்ளாதீர்கள்
ஏனெனில் பணிவுக்கும்
அடிமைத்தனத்துக்கும்
வித்தியாசம் தெரியாத
மேதாவிகள் உண்டு

நினைவுப்பரிசுகள் எதற்கு
நினைவுகளே
பரிசாக ஆன பின்பு

பொறுத்திருங்கள்
நீங்கள் செய்யும்
ஒவ்வொரு நல்ல (அல்லது தீய)
செயலுக்கும் அதற்கான
பிரதிபலன் கிடைத்தே தீரும்

சோர்வு என்பதே
நமது வாழ்வில் கிடையாது
புத்துணர்ச்சியோடு
நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
எனது வெற்றிக்கான ஏணிப்படிகளே

ஒரு தோல்வியில் இருந்து
கற்றுக்கொண்டால்
அந்த தோல்வியும் வெற்றிதான்

அரிதாக
இருக்கும் வரை
ஆச்சரியமாய்
பார்க்கப்படுவாய்
எளிதாகி விட்டால்
புறக்கணிக்கபடுவாய்