சிலருக்கு அன்பு காட்ட
தெரியவில்லை
சிலருக்கு நம் காட்டும்
அன்பே தெரியவில்லை

உடல்நலத்தை
முக்கியத்துவம் கொடுத்து
பேணும் நாம்
மனநலத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து
பேணுவதில்லை

தோல்வியை சமாளிக்க முடியலாம்
ஆனால் நம்பிக்கையை இழந்தால்
வாழ்க்கையே வீணாகிவிடும்

வாழ்க்கையில
பின்னாடியும் போகாமல்
முன்னாடியும்
போக முடியாமல்
இதற்க்கு இடையில்
நிக்குறதுக்கு
பெயர் தான் வாழ்க்கையோ

நீ சுயமாகவும்
சுதந்திரமாகவும் சிந்தித்ததை
எல்லோரும் விரும்புகிறார்களா
இல்லை வெறுக்கிறார்களா
என நினைத்து
ஒரு போதும்
கவலைப்பட தேவையில்லை

காத்திருக்கும் பொறுமை
நமக்கிருந்தாலும்
காலத்துக்கு இல்லை

வாழ்க்கை புயல்களை
தவிர்க்கும் பயணம் அல்ல
அவற்றில் நடனமாட
கற்றுக்கொள்வதே

வாழ்க்கையில்
பிடித்தது எல்லாமே
கிடைப்பதும் இல்லை
கிடைத்த எல்லாவற்றையும்
பிடித்தது போல்
மாற்றவும் முடிவதில்லை
ஆனாலும் வாழ்கிறோம்
ஆயுள் முடியும் வரை
வாழவேண்டும் என்பதற்காக

நீ விரும்புவதை செய்வதில்
உன்சுதந்திரம் அடங்கியுள்ளது
நீ செய்வதை விரும்புவதில்
உன்மகிழ்ச்சி அடங்கியுள்ளது

பழகும் மனிதர்களை
தேர்ந்தெடு
நெருப்புடன் கைகோர்த்தால்
வெந்தாலும்
ஒளியாய் மாறுவாய்