இன்று செய்த
சிறிய நல்ல செயலே
நாளை உன்னை உயர்த்தும்
நினைவாக மாறும்
எமுதப்படாத
எழுத முடியாத
வரிகளுக்குப்
பின்னால் சொல்லப்படாத
சொல்ல முடியாத
வார்த்தைகள் ஏராளம்
ஏதோ ஒன்றை
கற்றுக் கொள்ள வேண்டும்
என்ற ஆர்வம் மட்டும்
இருந்தால் போதும்
அந்த விஷயம்
வெகு சுலபமாக
உங்களால்
கற்றுக் கொள்ள முடியும்
அதில் சிறப்பானவராக
திகழவும் வாய்ப்பு அமையும்
பிடித்தவர்கள் பேசாத
ஒரு நொடியில்
மனம் ஓராயிரம்
போர்களங்களை சந்திக்கிறது
உன்னைவிட
பெரியவர்களை வெறுக்காதே
அவர்களை போல
உயர முயற்சிக்கவும்
பிறப்பு இறப்பு மட்டுமே
நம்மை தேடி வரும்
மற்றவற்றை நாம் தான்
தேடி செல்ல வேண்டும்
அமைதி கூட
ஒரு ஆயுதம் தான்
காரணம்
அது கூட
சில நேரங்களில்
மரணத்தை பரிசளிக்கும்
நம்மால் ஒருவருக்கு
பிரச்சனைகள் வருதென்றால்
அந்த இடத்தவிட்டு
விலகிரணும்
அது உறவானாலும் சரி
உயிர் நட்பென்றாலும் சரி
கவலைகள் எல்லாம்
கனவைப்போல்
கலைந்துப்போக
வேண்டுமென்பதே
அனைவரின் கனவு
மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் சாரலோடு
மழையில் நனையும் போது
துன்பங்கள் கூட சந்தோசமாக
மாறி விடுகிறது
📖 பக்கம் 295 / 606
📋 Copied