பாசம் வைச்சாலே
பிரச்சனை தான்
ஒன்னு தனியா
விட்டு போவாங்க இல்ல
தவிக்க விட்டு போவாங்க

புரிதலற்ற உறவுகள் நம் வாழ்வின் சாபம்

தோல்வி வரும் போது
நம் மனம் துவண்டு போகாமலும்
வெற்றி பெறும் போது
துள்ளாமலும் இருத்தலே
நம் வாழ்வின் உயர்விற்கு
வழிவகுக்கும்

நம்மை நாமே
வெறுக்கும் நிலைக்கு
ஆளாக்கி விடுகிறது
சிலர் மேல்
நாம் கொண்ட அன்பு

சில இரவுகள்
தூங்காமல் கழிகின்றன
காரணம் கனவுகள் இல்லை
உணர்வுகள்

கிடைக்குமா என கேட்காதே
கிடைக்கும் என நம்பு
நடக்குமா என கேட்காதே
நடக்கும் என நம்பு
முடியுமா என கேட்காதே
முடியும் என நம்பு

வாழ்க்கையில் திரும்ப
பெற முடியாதவை
உயிர் நேரம்
பேசிய வார்த்தை

அன்பு அதிகமாக
வைக்கப்படுகின்ற
எல்லா இடங்களிலும்
கண்ணீரும் அதிகம்

வாழ்க்கை உங்களை
எங்கு அழைத்துச் சென்றாலும்
உங்கள் உண்மையான
உருவத்தை மறக்காதீர்கள்

வலிகளை தந்து
காலம் நம்மை
வலிமையாக்கிக் கொண்டே
இருக்கிறது மீண்டும்
ஒரு பெரிய
உடைத்தலுக்காக