வழி தெரியாமல் நின்றாலும்
முன்னே நடந்தால் தான்
புதிய பாதை உருவாகும்

அனுபவசாலிகள் என்பவர்கள்
வயதை கடந்து
வருபவர்கள் அல்ல
வலிகளை கடந்து
வருபவர்களே

முகத்தில் சிரிப்பு இருந்தால்
உள்ளத்தின் சுமைகள் கூட
குறையும்

உங்களால் கனவு காண
முடிகிறதென்றால்
அதை அடையவும் முடியும்

போனது போகட்டும்
அடுத்த நகர்வு
அற்புதமாகட்டும்

உலகத்திலேயே மிகச்சிறந்த
முட்டாள்தனமான நம்பிக்கை
நம்மள தவிர எல்லாருமே
சோம்பேறி
என்று நினைக்கிறது தான்

கொஞ்சம் அனுசரித்து
வாழ்வது நல்ல வாழ்க்கை
எல்லாவற்றையும் அனுசரித்து
வாழ்வது நரக வாழ்க்கை

நாளை என்ன ஆகும்
என்று பயப்படாமல்
இன்று என்ன செய்யலாம்
என்று யோசிக்கவும்

விழும் வேகத்தைவிட
எழும்வேகம் அதிகமாய் இருத்தால்
தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்...

அவர்கள் போல் வாழ்க்கை
இவர்கள் போல் வாழ்க்கை
வாழவேண்டும் என்ற
ஏக்கப்பெருமூச்சில்
நம் வாழ்க்கை வெறுக்கப்பட்டு
வாழாமலேயே முடிக்கப்படுகிறது