வெறும் கனவுகள் இல்லாமல்
செயல்கள் கூடும்
போது தான் வெற்றி
போராடி தோற்றுப் பார்
ஜெயித்தவனும் உன்னை
மறக்க மாட்டான்
வாழ்க்கையில்
நீ தடுக்கி விழுந்தால்
தூக்கிவிட யாரும்
வர மாட்டார்கள்
ஆனால் நிமிர்ந்து
நீ நடந்தால்
தடுக்கிவிட
பலரும் இருப்பார்கள்
என்னைப் பயன்படுத்த என்
வாழ்வில் நீ வந்தாய் என்றால்
நான் உன்னை என் வாழ்க்கையிலிருந்து
குப்பை போல தூக்கி எறிவேன்
வெற்றி என்பது
இலக்கு அல்ல
தொடர்ந்து
நடைபோடும் மனநிலை
நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சொல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்
வாழ்க்கை என்றால்
வரும் ஆயிரம் துயர்
அதை எதையும்
பொருட்படுத்தாமல்
நீ தொடர்ந்து உயர்
எனது தேவை
என்பது அவசியம்
எனக்கு மட்டுமே
தேவையென்பது சுயநலம்
இன்னும் தேவையென்பது
பேராசை
எதுவும் தேவையில்லை
என்பதே மனிதாபிமானம்
தனியாக இருக்கும்போது
சிந்தனையிலும்
கூட்டத்தோடு இருக்கும்போது
வார்த்தையிலும்
கவனமாக இருக்க வேண்டும்
பிடித்தவர்களின் மௌனமே
சில நேரம்
கனமான வலியாக மாறும்
📖 பக்கம் 285 / 606
📋 Copied