பிறந்ததை எண்ணாதே
வாழும் விதத்தை யோசி
கைவர்கள் நேர்மையாக இருப்பார்கள்
பொறாமைக்காரர்கள்
நண்பர் போல நடிப்பார்கள்
சிரித்த நிமிடங்களை விட
அழுத நிமிடங்களே
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை
(ஞாபகங்கள்)
மனிதன்
துன்பப்படுவதற்கு முன்பு
கல்லாகவும்
துயரங்களுக்கு பின்பு
மீண்டும் தன்னைத் தானே
உருவாக்கிக் கொள்வதில்
சிற்பியாகவும் இருக்கிறான்
(யதார்த்தம்)
சிறிய முயற்சி கூட
பெரிய மாற்றத்தை உருவாக்கும்
ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
(மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)
உன் வாழ்வில்
நீ இனிமை பெற
என் வாழ்வில் நான்
தனிமை பெற்றுவிட்டேன்
ஆசை நிராசையாகலாம்
லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்
பயிற்சியில் குறையிருக்கலாம்
முயற்சியில் தோல்வியடையலாம்
ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய
நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய
நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற
தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே
வெற்றி உன் காலடியில்
என்பதை மறவாதே
நம்முடன்
பயணிக்கும் உறவுகளின்
உண்மைத்தன்மையை
ஆராயத் தொடங்கினால்
வாழ்வே சூனியமாகிவிடும்
நம்
அன்பு ராச்சியத்தை
ஆட்சி செய்ய
கால் பதிக்கின்றாள்
குட்டி தேவதை
📖 பக்கம் 284 / 606
📋 Copied